மனித மூளை இன்டர்நெட்டை விட குறைவான அளவில் செயல்படுவதாக ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது. வை-ஃபை ஒரு விநாடிக்கு 50 மில்லியன் பிட்களை செயல்படுத்துகிறது. நமது மூளை 10 பில்லியன் பிட்கள் தகவல்களைப் பெற்றாலும் ஒரு விநாடிக்கு 10 பிட்கள் என்ற அளவிலேயே தகவல்களை செயலாக்கம் செய்கிறது. மூளையில் உள்ள ஒவ்வொரு நியூரானும் தகவல்களை விரைவாகச் செயலாக்க முடியும் என்றாலும், மூளையானது அது பெறும் தரவுகளிலிருந்து விநாடிக்கு சுமார் 10 பிட்களை மட்டுமே பிரித்தெடுக்கிறது.