'சூனா பானா' பாணியில் மது குடித்தவர் பலி

58பார்த்தது
'சூனா பானா' பாணியில் மது குடித்தவர் பலி
மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்தவர் ஜோதிபாசு (32), மனைவியை பிரிந்ததில் மன உளைச்சலில் இருந்த அவர், தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளார். இந்நிலையில், ஒரு பாட்டில் மதுவை குடித்துவிட்டு மற்றொரு பாட்டிலில் பூச்சிமருந்து கலந்து பாதியை குடித்துவிட்டு வைத்திருந்துள்ளார். அப்போது அங்கு வந்த அவரின் நண்பர் ஜெரால்டு (24) போதையில் பூச்சிமருந்து கலந்த மதுவை எடுத்து குடித்துள்ளார். இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் ஜெரால்டு உயிரிழந்தார். ஜோதிபாசு நலமாக உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.