நான்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சீனாவில் குடை போன்ற ஒரு பொருளைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். பனை ஓலையில் குச்சியைச் செருகி உருவாக்கப்பட்ட இந்தக் குடை வெயிலில் இருந்து காப்பாற்றியது. 3,500 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்து நாட்டில் அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், செல்வந்தர்கள், மதகுருமார்கள் மட்டும் வெயிலுக்கு குடைப் பிடிக்க ஆரம்பித்தனர். அதிக அளவில் குடைகளை உற்பத்தி செய்யும் நாடாக இருப்பதும் சீனாதான்.