கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரபல கோயில் ஒன்றில், வெண்கல விக்கிரகங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனை நோட்டமிட்ட திருட்டு கும்பல் ஒன்று, இரவு நேரத்தில் கோயிலுக்குச் சென்று அந்த வெண்கல விக்கிரகங்களை திருடியுள்ளது. திருடுவதற்கு முன், திருடன் ஒருவர் அம்மனை மனம் உருகி வேண்டினார். தொடர்ந்து, திருடிய பொருட்கள் விற்பனை செய்ய முயன்ற போது திருட்டு கும்பல் சிக்கியுள்ளது. இதில், வன்னியூர் பகுதியைச் சேர்ந்த மனோஜ், அவரது கூட்டாளி நடராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.