நீட் வினாத்தாளில் 19-வது கேள்விக்கு சரியான விடையை கண்டுபிடிக்க 3 நிபுணர்கள் கொண்ட குழுவை அமைக்க டெல்லி ஐஐடி இயக்குநருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அவர்கள் கண்டறிந்த பதிலை செவ்வாய்க்கிழமை (இன்று) நண்பகல் 12 மணிக்குள் உச்ச நீதிமன்றப் பதிவாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது. நீட் தொடர்பான பல மனுக்களை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை (நேற்று ) விசாரித்தது குறிப்பிடத்தக்கது.