கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிழற்கூரை சரிந்து விபத்து

71பார்த்தது
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிழற்கூரை சரிந்து விபத்து
தமிழ்நாட்டில் கோடை வெயில் தணிந்து கோடை மழை தொடங்கியுள்ளது. கோவையில் கடந்த ஒரு வார காலமாக மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மழை கொட்டுகிறது. மழை காரணமாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் அமைக்கப்பட்டு உள்ள இரும்பினால் ஆன மேற்கூரை திடீரென சரிந்து விழுந்தது. இதில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அரசு ஊழியர்கள் மற்றும் செய்தியாளர்களின் ஐந்து இருசக்கர வாகனங்கள் சேதம் அடைந்தது.

தொடர்புடைய செய்தி