கரூர் மாவட்டம் குளித்தலையில் இயங்கிவரும் டீக்கடையில் வாங்கி சாப்பிட்ட போண்டாவில் எலி இருந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார். எலி இருக்கிறது விற்பனை செய்ய வேண்டாம் என கூறியும் கடைக்காரர் மறுத்ததாக அந்த போண்டாவை வாங்கி சாப்பிட்ட நபர் கூறியுள்ளார். தற்போது போண்டா சாப்பிட்டவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இதனையடுத்து தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் நகராட்சி நிர்வாகம் விசாரணை மேற்கொண்டு பொருட்களை பறிமுதல் செய்து கடையை மூடினர்.