தமிழகத்தில் கடந்த நவம்பர் மாதம், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த விண்ணப்பங்களின் பரிசீலனை நவம்பர் 29ஆம் தேதி முதல் கடந்த 24ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்நிலையில், வருகிற ஜனவரி 6ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அதன்பின் புதிய வாக்காளர்களுக்கு, தேசிய வாக்காளர் தினமான ஜனவரி 25ஆம் தேதி முதல் புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளன.