இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் செயல்படுகின்ற அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவு வழங்கும் திட்டத்தை கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் சேகர்பாபு கூறினார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அழகர் கோயில், மருதமலை கோயில்களுடன் சேர்த்து இதுவரை 13 கோயில்களில் அன்னதானத் திட்டம் செயல்படுத்தப்பட்டு இருப்பதாக கூறினார்.