விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று (டிச. 28) அனுசரிக்கப்படும் வேளையில் பல்வேறு திரைப்பிரபலங்களும் அரசியல் கட்சியினரும் அவருக்கு அஞ்சலி செலுத்துகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், "மாசற்ற மனதுக்கும் தூய அன்பிற்கும் சொந்தக்காரராக விளங்கி, மண்ணைவிட்டு மறைந்தாலும் நமது நெஞ்சங்களில் வாழும் நண்பர், கேப்டன் விஜயகாந்தை நினைவுகூர்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.