"கோட்" படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படத்தை பகிர்ந்த தயாரிப்பாளர்

67பார்த்தது
"கோட்" படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படத்தை பகிர்ந்த தயாரிப்பாளர்
வெங்கட் பிரபு இயக்கத்தில் 'தளபதி' விஜய் நடித்து வரும் "கோட்" படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படம் ஒன்றை அப்படத்தின் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா கல்பாத்தி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ப்ளூ மேட் பின்னணியில் படப்பிடிப்பு நடைபெறுவதாக புகைப்படத்தில் தெரிகிறது. இப்படத்தில் சிறு வயது தோற்றத்தில் விஜய் தோன்றுவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. படம் செப்டம்பர் 5-ஆம் தேதி தொடர் விடுமுறையை முன்னிட்டு வெளியாகிறது.

தொடர்புடைய செய்தி