10 ஆண்டுகளாக பத்திரிகையாளர்களை சந்திக்காத பிரதமர்

59பார்த்தது
10 ஆண்டுகளாக பத்திரிகையாளர்களை சந்திக்காத பிரதமர்
இந்தியாவில் பிரதமர் கடைசியாக பத்திரிகையாளர்களை சந்தித்து 10 ஆண்டுகள் ஆகின்றன என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் தகவல் தொடர்பு ஆலோசகராக இருந்த பன்கஜ் பச்சோரி தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருக்கிறார். கடைசியாக 2014ஆம் ஆண்டு அப்போதைய இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினார் என கூறியுள்ளார். தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் இதுவரை செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தியதில்லை என விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அமெரிக்காவில் அதிபர் பைடனுடன் கடந்த ஆண்டு செய்தியாளர்களை சந்தித்திருந்தார். அப்போது கேட்கப்பட்ட 2 கேள்வியில் 1க்கு மட்டுமே பதிலளித்திருந்தார்.

தொடர்புடைய செய்தி