நெல்லின் வரத்து அதிகரிப்பு மற்றும் புதிய நெல் அறுவடை ஆகியவற்றின் காரணமாக தமிழகத்தில் அரிசி விலை குறைந்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல்-அரிசி மொத்த வியாபாரிகள் சம்மேளன தலைவர் துளசிங்கம், "26 கிலோ அரிசி மூட்டை ரூ.20 வரையில் குறைந்துள்ளது. இட்லி அரிசியின் விலையும் சரிவை சந்தித்துள்ளது. ரூ.1010-க்கு விற்பனையான 26 கிலோ இட்லி அரிசியின் விலை தற்போது 980-ஆக வும், ரூ.1030-க்கு விற்பனை செய்யப்பட்ட இட்லி அரிசியின் விலை 990-ஆகவும் குறைந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.