அயர்லாந்தை சேர்ந்த விக்டோரியா என்ற பெண் தன்னிடம் இருந்து பிரித்துக் கொண்டு செல்லப்பட்ட மகளுக்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, 17 ஆண்டுகளுக்கு பின் வெற்றிப்பெற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சவுதி அரேபியாவை சேர்ந்தவரை விக்டோரியா திருமணம் செய்துள்ளார். அவர்களது குழந்தையான பாத்திமாவிற்கு 2 வயது இருக்கும்போது விக்டோரியாவை ஏமாற்றி, மகளை சவுதிக்கு அழைத்து சென்று தந்தை வளர்த்து வந்துள்ளார். இதையடுத்து, விக்டோரியா 17 வருடம் சட்டப்போராட்டம் நடத்தி வெற்றி கண்டுள்ளார்.