குழந்தை கடத்தல் வதந்திகளை நம்ப வேண்டாம் - காவல்துறை

605பார்த்தது
குழந்தை கடத்தல் வதந்திகளை நம்ப வேண்டாம் - காவல்துறை
குழந்தை கடத்தல் என சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று காவல்துறை அறிவுறுத்தல் வழங்கி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் செம்மடமுத்தூரில் குழந்தையை கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் ஒருவரைப் பிடித்து பொதுமக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் குழந்தை கடத்தல் என்று பரவும் தகவல் வதந்தி என தெரிய வந்தது. குழந்தை கடத்தல் என வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி