கச்சத்தீவுக்கு ராமநாதபுரம் மன்னர் உரிமை கோர முடியும்

79பார்த்தது
கச்சத்தீவுக்கு ராமநாதபுரம் மன்னர் உரிமை கோர முடியும்
திருச்சியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து தமிழக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், பத்தாண்டு காலம் ஆட்சியில் இருந்தபோது பிரதமர் மோடி கச்சத்தீவை மறந்துவிட்டார். கச்சத்தீவை தாரைவார்க்க எந்த இடத்திலும் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஒப்புக்கொள்ளவில்லை. இன்றைக்கும்கூட ராமநாதபுரம் மன்னர் கச்சத்தீவுவுக்கு உரிமை கோர முடியும். எனவே, நெதர்லாந்தில் உள்ள உலக அமைதி நீதிமன்றத்தில் இரு நாடுகளையும் மனுதாரர்களாக சேர்த்து கச்சத்தீவு தன்னுடைய சொத்து என்று ராமநாதபுரம் மன்னர் வழக்கு தொடுக்க முடியும் என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி