குஜராத் பாஜக அரசுக்கு நெருக்கடி

77பார்த்தது
குஜராத் பாஜக அரசுக்கு நெருக்கடி
குஜராத் மாநிலம் ராஜ்கோட் தொகுதி பாஜக வேட்பாளரான புருஷோத்தம் ரூபாலாவை மாற்ற வேண்டும் என்ற ராஜ்புத் சமூக மக்கள் கோரிக்கை வலுக்கிறது. ராஜ்புத் சமூக ராஜாக்கள், பிரிட்டிஷாருக்கு பெண் கொடுக்கும் அளவுக்கு ஆங்கிலேயர்களிடம் நெருக்கமாக இருந்ததாக ஒன்றிய அமைச்சர் ரூபாலா சர்ச்சையாக பேசினார். ரூபாலா சர்ச்சைப் பேச்சால் குஜராத், ராஜஸ்தான், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் வசிக்கும் ராஜ்புத் சமூக மக்கள் கொந்தளித்துள்ளனர். இந்த சர்ச்சை பேச்சுக்கு அவர் மன்னிப்பு கோரியிருந்தார். ரூபாலாவை மாற்றாவிட்டால் நாடு முழுவதும் வசிக்கும் 22 கோடி ராஜ்புத் பிரிவினர் பாஜகவை புறக்கணிப்பார்கள் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி