மீண்டும் மும்பை அணிக்கு திரும்பிய சூர்ய குமார் யாதவ்

77பார்த்தது
மீண்டும் மும்பை அணிக்கு திரும்பிய சூர்ய குமார் யாதவ்
டி20 பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் நம்பர் 1 இடத்தில இருக்கும் சூர்யகுமார் யாதவ், கடந்த டிசம்பர் 2023இல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரின் போது கணுக்காலில் காயம் ஏற்பட்டதால் அதன் பிறகு நீண்ட நாட்கள் இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் தென்படவில்லை. இதையடுத்து அவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் அனுமதி பெற்று உடற்தகுதி தேர்ச்சி தேர்வில் ஈடுபட்டு வந்தார். தற்போது காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளார். இதையடுத்து ஐபிஎல் தொடரில் வரும் 7ஆம் தேதி நடைபெற உள்ள டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி சார்பில் களமிறங்குகிறார்.

தொடர்புடைய செய்தி