சாம்பியன் டிராபியை இந்திய அணியே வெல்லும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கெல் கிளார்க் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா இந்த தொடரில் அதிக ரன்களை குவித்தவர் பட்டியலில் முதலிடத்தை பிடிக்கப் போகிறார். ரோஹித் பார்மிற்கு திரும்பியுள்ளது இந்தியாவிற்கு பலமாக உள்ளது. இந்திய அணி மூன்றாவது முறையாக கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது என்றார்.