இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வென்ற நிலையில், 2-வது டெஸ்ட் நேற்று புனேவில் தொடங்கியது. இதில் முதல் இன்னிங்ஸில் நியூசி. 256 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இதனிடையே இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 156 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. இந்திய பேட்டிங்கில் அதிகபட்சமாக ஜடேஜா 18 ரன்களை எடுத்தார். நியூசி தரப்பில் சான்ட்னர் 7 விக்கெட்டுகளை விழ்த்தினார். இதனால் 103 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை தொடங்கிய நியூசி. அணி ஆடிவருகிறது.