மது போதையில் நண்பனை கொன்று புதைத்த பயங்கரம்

75பார்த்தது
மது போதையில் நண்பனை கொன்று புதைத்த பயங்கரம்
சிவகங்கை: தேவகோட்டை அருகே முத்துநாட்டு கண்மாயில் ஒருவரை அடித்துக் கொலை செய்து புதைத்துள்ளதாக தேவகோட்டை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் சந்தேகத்தின் பெயரில் இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் முத்துநாட்டு கண்மாயில் கடந்த மார்ச் மாதம் தேவகோட்டை ஜீவாநகரை சேர்ந்த பாண்டியராஜன் (38), அவரது நண்பர் பூங்குடித்தலை சேர்ந்த செல்வகுமார் மற்றும் ஐந்து நண்பர்களுடன் மது அருந்தி உள்ளனர்.

அப்பொழுது சின்னகோடகுடியை சேர்ந்த ராஜாவுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அது கைகலப்பாக மாறி உடனிருந்த நண்பர்கள் சேர்ந்து பாண்டியராஜனை அடித்து கொலை செய்துள்ளனர். பாண்டியராஜன் கொண்டு வந்த டாட்டா வாகனத்தில் அவரைக் கொண்டு சென்று கண்மாயின் நடுப்பகுதியில் குழி தோண்டி புதைத்தோம் என தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி