"ஆளுநர் சட்டப்பேரவையில் சொந்த கருத்துகளை சொல்ல அனுமதி இல்லை"

63பார்த்தது
"ஆளுநர் சட்டப்பேரவையில் சொந்த கருத்துகளை சொல்ல அனுமதி இல்லை"
சட்டப்பேரவையில் ஆளுநருக்கு உரை நிகழ்த்ததான் அனுமதியே தவிர, சொந்த கருத்துகளை சொல்ல அனுமதி இல்லை என சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அப்பாவு, "அவையின் உள்ளே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 234 உறுப்பினர்களுக்கு மட்டுமே கருத்து சொல்ல அனுமதி. இதுதான் நாடாளுமன்ற ஜனநாயகம். சட்டப்பேரவைக்கும் இது பொருந்தும். கடந்தாண்டு, ஆளுநர் கடைசி பக்கத்தை மட்டும் படித்தார். இந்த முறையாவது அரசின் உரையை ஆளுநர் முழுமையாக படிப்பார் என நம்புகிறேன்”நம்புகிறேன்" என பேட்டியளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி