ஒவ்வொரு மாதமும் மின்சாரம் கணக்கீடு செய்யும் முறையை அமல்படுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்திருக்கிறார். ஈரோட்டில் விசைத்தறி உரிமையாளர்களை சந்தித்து முதல்வர் உரையாடினார். அப்போது அவர்கள் மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கிட்டு செலுத்தும் முறையை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் இவ்வாறு பதிலளித்துள்ளார்.