முன்னாள் முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்ததற்கு மனித தவறே காரணம் என மக்களவையில் தாக்கலான பாதுகாப்புத்துறை நிலைக்குழுவின் அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன், திடீரென சூழ்ந்த மேகக் கூட்டங்களால் எதிர்பாராத விதமாக விபத்து நேர்ந்திருக்கும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது ஹெலிகாப்டரின் கருப்புப் பெட்டி, காக்பிட் குரல் பதிவுகள் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டு மனித தவறே காரணம் என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.