ஆபாசமான மற்றும் சர்ச்சைக்குறிய படங்கள், குறும்படங்களை ஒளி பரப்புவதற்காக 18 ஒடிடி தளங்களை முடக்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இளை அமைச்சர் எல்.முருகன் மக்களவையில் நேற்று முன்தினம் (டிச., 18) இதனை தெரிவித்தார். இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைக் கருத்தில் கொண்டு சர்ச்சைக்குறியவற்றை ஒளிபரப்பு செய்வதை தடுக்க மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றார்.