`கூழாங்கல்' இயக்குனர் பி.எஸ்.வினோத் இயக்கத்தில் சூரி நடித்த திரைப்படம் 'கொட்டுக்காளி'. கடந்த மாதம் 23-ம் தேதி இப்படம் வெளியானது. இந்த படமானது ரிலீஸுக்கு முன்பே பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பார்வையாளர்களிடம் பாராட்டுகளை பெற்றது. இந்நிலையில், ரஷ்யாவில் நடைபெற்ற 22-வது அமுர் இலையுதிர்கால சர்வதேச திரைப்பட விழாவில் கொட்டுக்காளி' திரைப்படத்திற்கு 'கிராண்ட் பிரிக்ஸ்' விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை இயக்குனர் பி.எஸ்.வினோத் பெற்றுள்ளார்.