தந்தையே மகனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த கொடூரம்!

80பார்த்தது
தந்தையே மகனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த கொடூரம்!
குஜராத்தில் தந்தையே மகனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போக்குவரத்துக் காவலராக பணிபுரியும் சஞ்சய் பரியா தனது மகன் வன்ஷ்-யை 10 பணிக்குச் செல்லும் போது உடனழைத்துச் சென்றுள்ளார். 2 நாட்களுக்கு பின்னர், சஞ்சய் தன் மனைவியை தொடர்பு கொண்டு மகனை விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவி, போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவல்றிந்த போலீசார், சஞ்சய் பணிபுரிந்து வந்த போக்குவரத்து நிழற்குடைக்கு சென்று பார்த்த போது வன்ஷ் வாயில் நுரை தள்ளிய நிலையில் கழுத்து நெறிக்கப்பட்டு சடலமாக கிடந்துள்ளார். இதையடுத்து, தலைமறைவான தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி