கலைஞர் பிறந்த நாள் - மதிய உணவு வழங்கிய திமுக எம்.பி.க்கள்

85பார்த்தது
மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கலைஞரின் 101ஆவது பிறந்த நாள் விழா இன்று (ஜூன் 3) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டெல்லி ஜல்விகார் பகுதியில் வாழும் தமிழர்களுக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா மற்றும் கனிமொழி சோமு ஆகியோர் மதிய உணவு வழங்கினர். முன்னதாக, மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக பிரமுகர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

நன்றி: சன் நியூஸ்