ஜோ பைடனை நோக்கி கண்டன முழக்கம் எழுப்பிய பாலஸ்தீன ஆதரவாளர்கள்

70பார்த்தது
ஜோ பைடனை நோக்கி கண்டன முழக்கம் எழுப்பிய பாலஸ்தீன ஆதரவாளர்கள்
இஸ்ரேல்-ஹமாஸ் போரில் காசாவில் உள்ள அப்பாவி பாலஸ்தீனர்கள் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர். போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை முடிவுக்கு வராத நிலையில், தாக்குதல் நீடிக்கிறது. இதற்கிடையில் இஸ்ரேலுக்கு எதிராக அமெரிக்கா முழுவதும் பாலஸ்தீன ஆதரவாளர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவின் ரெஹோபோத் கடற்கரையில் உள்ள தேவாலயத்திற்கு அந்நாட்டின் அதிபர் ஜோ பைடன் சென்றார். அங்கே பாலஸ்தீன ஆதரவாளர்கள் திரண்டு போராட்டம் நடத்தி வந்தனர். அவர்கள் அமெரிக்க அதிபர் பைடனை நோக்கி கண்டன முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி