மோடி வெற்றி பெற்றால் இலவச ஸ்நாக்ஸ்.. அமெரிக்க உணவகம்

80பார்த்தது
மோடி வெற்றி பெற்றால் இலவச ஸ்நாக்ஸ்.. அமெரிக்க உணவகம்
நாடு முழுவதும் நடந்து முடிந்த மக்களவை தேர்தல் முடிவுகள் நாளை (ஜூன் 4) வெளியாகவுள்ளது. யார் வெற்றி பெறப்போகிறார்கள் என நாடே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், மக்களவைத் தேர்தல் 2024இல் பிரதமர் மோடி வெற்றி பெற்றால் அனைவருக்கும் இலவசமாக மேத்தி கோத்தா (குஜராத் ஸ்நாக்ஸ்) வழங்கப்படும் என அமெரிக்காவின் எடிசன் நகரில் அமைந்துள்ள உணவகம் ஒன்று அறிவித்துள்ளது. கடந்த 2014, 2019 தேர்தல்களிலும் மோடி வெற்றி பெற்ற போது இந்த உணவகம் இலவசமாக இந்த சிற்றுண்டியை வழங்கியுள்ளது.

தொடர்புடைய செய்தி