கருணாநிதி தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள்

82பார்த்தது
கருணாநிதி தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள்
அறிஞர் அண்ணா வழியில் கருணாநிதியும் தமிழ் பயிற்றுமொழி கொள்கையில் உறுதியானவர். தமிழில் பயிலும் மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க அவர் ஆணை பிறப்பித்தார். 1996ல் முதல்வர் ஆன போது மெட்ரிக் பள்ளிகளிலும் தமிழை பாடமொழியாக்குவதற்கான உத்தரவு போடப்பட்டது. அனைத்து பள்ளிகளிலும் 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை தமிழை ஒரு பாடமாக கட்டாயம் கற்பிக்கும் சட்டத்தை இயற்றினார். தமிழை செம்மொழியாக மத்திய அரசு அறிவித்ததற்கு பின்னால் கருணாநிதியின் மெனக்கெடல் உண்டு. இது போல மேலும் பல விஷயங்களை தமிழ் மொழி வளர்ச்சிக்காக கருணாநிதி செய்துள்ளார்.

தொடர்புடைய செய்தி