ஐஏஎஸ் தம்பதியரின் மகள் தற்கொலை

58பார்த்தது
ஐஏஎஸ் தம்பதியரின் மகள் தற்கொலை
தெற்கு மும்பையில் உள்ள மந்த்ராலயா அருகே இன்று ஜுன் 3) திங்கள்கிழமை அதிகாலை ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. மகாராஷ்டிர கேடர் ஐஏஎஸ் அதிகாரிகளின் மகள் லிபி ரஸ்தோகி (27) தற்போது எல்எல்பி படித்து வருகிறார். முன்னதாக அவர் அழகு ஆலோசகர், விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் நிபுணராக பணியாற்றினார். இந்த நிலையில், மன அழுத்தம் காரணமாக கட்டிடத்தின் 10வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி