புதுப்பேட்டை 2 அறிவிப்பை வெளியிட்ட இயக்குனர்!

590பார்த்தது
புதுப்பேட்டை 2 அறிவிப்பை வெளியிட்ட இயக்குனர்!
இயக்குனர் செல்வராகவன் அவரது தம்பியான நடிகர் தனுஷை வைத்து இயக்கிய படம் 'புதுப்பேட்டை' இந்த படம் வெளியான பொழுது மக்களிடம் நல்ல வரவேற்பை பெறவில்லை என்றாலும் சமீபகாலமாக ரசிகர்களிடையே இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இதனையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் வரும் என இயக்குனர் செல்வராகவன் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த 2024 ஆம் ஆண்டு புதுப்பேட்டை படத்தினுடைய இரண்டாம் பாகம் உருவாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக செல்வராகவன் தெரிவித்திருக்கிறார். மேலும் ஆயிரத்தில் ஒருவன் 2ஆம் பாகத்தையும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி