தேசியவாத காங்கிரஸ் அஜித்பவாருக்கே சொந்தம்

78பார்த்தது
தேசியவாத காங்கிரஸ் அஜித்பவாருக்கே சொந்தம்
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெயர், சின்னம் ஆகியவற்றை அஜித் பவார் தலைமையிலான அணிக்கு தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. பெரும்பான்மை எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் ஆதரவு அஜித் பவாருக்கு இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்தாண்டு ஜூலை மாதம் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து, பாஜக கூட்டணியில் இணைந்த அஜித் பவார், துணை முதலமைச்சரானர் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பை நாங்கள் வரவேற்கிறோம் என அஜித்பவார் கூறியுள்ளார்.
Job Suitcase

Jobs near you