த்ரில் வெற்றி - உலக கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா

85694பார்த்தது
த்ரில் வெற்றி - உலக கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா
தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் இந்திய அணி, தென்னாப்பிரிக்க அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் இந்திய அணி உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த தென்னாபிரிக்க அணி 7 விக்கெட் இழப்பிற்கு 244 ரன்கள் எடுத்திருந்தது. இதனையடுத்து 245 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 248 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி