பிரபல நடிகைக்கு பாலியல் தொல்லை.. ஷாக் நியூஸ்

50503பார்த்தது
பிரபல நடிகைக்கு பாலியல் தொல்லை.. ஷாக் நியூஸ்
சென்னை ராயப்பேட்டை ஜிபி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் நடிகை ஷெரினா. இவர் ‘வினோதய சித்தம்’ என்ற படத்திலும், பிக்பாஸ் சீசன் 6ல் போட்டியாளராகவும் கலந்து கொண்டு புகழ் பெற்றவர். இவருக்கு தொடர்ச்சியாக அடையாளம் தெரியாத நபரிடம் இருந்து அழைப்பு வருவதாகவும், ஆபாசமாக பேசுவதாகவும் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில் அவர் நடிகையிடம் டிரைவராக வேலை பார்த்த கார்த்திக் என்பதும், ஷெரினா உடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக வேலையைவிட்டு தூக்கியதால் தனது நண்பருடன் சேர்த்து இவ்வாறு செய்ததாக கூறியுள்ளார். இதனையடுத்து பாலியல் தொல்லை கொடுத்த இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி