கேரளா: கோட்டயத்தில் போலீஸ் அதிகாரி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்றுமானூர் காவல் நிலைய அதிகாரி ஷியாம் பிரசாத் இன்று (பிப்., 03) காலை கொடூரமாக கொல்லப்பட்டார். பல்வேறு வழக்குகளில் குற்றவாளியான ஜிபின் ஜார்ஜ் என்பவர் கடை ஒன்றில் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கு வந்த ஷியாம், தான் போலீஸ் என்றும் உள்ளே பிடித்து வைத்துவிடுவேன் என்றும் எச்சரித்துள்ளார். ஆத்திரமடைந்த ஜிபின், ஷியாமை கீழே தள்ளி மார்பில் மிதித்துக் கொன்றார். அங்கிருந்து தப்பிய ஜிபினை போலீசார் கைது செய்தனர்.