"தலைவிரித்தாடும் தீண்டாமை கொடுமை" - எல்.முருகன் பதிவு

64பார்த்தது
"தலைவிரித்தாடும் தீண்டாமை கொடுமை" - எல்.முருகன் பதிவு
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தனது ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “தலைவிரித்தாடும் தீண்டாமை கொடுமை. மனித நாகரீகம் அருவெறுக்கச் செய்யும் செயலை தடுத்து நிறுத்த திராணியற்ற போலி திராவிட மாடல் ஆட்சி. தமிழ்நாட்டில் குடிநீர் தொட்டிகளில் மலம், மாட்டுச்சாணம் போன்றவற்றை கலக்கும் நிகழ்வுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கல்வி எனும் அறிவு தீபத்தை ஏற்றும் பள்ளிகளில் மலம் பூசும் அவலங்கள் அடுத்தடுத்து அரங்கேறி வருகின்றன” என விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி