பிரதமருக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர்

55பார்த்தது
கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்தை அனுப்பி வைத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழாவில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், "கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட அனுமதி அளித்த ஒன்றிய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி. கலைஞர் நினைவு நாணயத்தில் 'தமிழ் வெல்லும்' என்ற சொல் இடம்பெற்றுள்ளது கலைஞரின் சாதனை" என்று கூறியுள்ளார்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி