திண்டுக்கல்லின் வரலாற்றை பறைசாற்றும் வகையில், நகரின் மையப்பகுதியில் மலைக்கோட்டை உயர்ந்து நிற்கிறது. 'திண்டு' போன்று அமைந்துள்ள பாறையின் மீது கம்பீரமாக எழுந்து நிற்கும் மலைக்கோட்டை, மண்ணின் வீரம் மற்றும் கலைக்கு சான்று. மலைக்கோட்டை, கடந்த 16-ம் நூற்றாண்டில் மதுரையை ஆட்சி செய்த முத்துகிருஷ்ணப்ப நாயக்கரால் கட்டப்பட்டது. இதை திருமலைநாயக்கர், ஹைதர்அலி, திப்புசுல்தான் ஆகியோர் விரிவுபடுத்தி கட்டினர்.