ஐ ஷோ ஸ்பீட் (IShowSpeed) என அழைக்கப்படும் அமெரிக்காவை சேர்ந்த பிரபல யூடியூபர் சமீபத்தில் நடந்த பிரபல மல்யுத்த போட்டியான WWE ராயல் ரம்பிள் போட்டியில் கலந்துகொண்டார். இதில் லாஸ்ட் மேன் ஸ்டேண்டிங் போட்டியின் ரிங்கில் ஏறிய ஸ்பீட், பேக் பிலிப் அடித்து நின்றார். அவரை ப்ரான் பிரேக்கர் என்ற வீரர் ஒரே அடியில் வீழ்த்தி அலேக்காக தூக்கி ரிங்கிற்கு வெளியே எறிந்தார். அவரை பிடித்த ஓடிஸ், வர்ணனையாளர்கள் அமர்ந்திருக்கும் மேஜையில் தூக்கி எறிந்தார். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.