குஜராத்: மேம்நகரைச் சேர்ந்த 21 வயது பெண் ஒருவருக்கு, தோல் நோய், முதுகு மற்றும் மார்பில் கொப்புளங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால், கணவருடன் ஏற்பட்ட தகராறில் விவாகரத்து கோரிவிட்டு தனது தாய் வீட்டிற்குச் சென்றார். இந்நிலையில், அப்பெண்ணிற்கு அழைப்பு விடுத்த கணவர், மார்பில் கொப்புளங்கள் சரியாகிவிட்டதா என கேட்டுள்ளார். அதனை அப்பெண் புகைப்படங்கள், மற்றும் வீடியோவாக பதிவு செய்து அனுப்பியுள்ளார். அதனை சமூகவலைத்தளங்களில் கணவர் வெளியிட்டதாக தெரிகிறது. போலீசார், இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.