அமெரிக்காவில் உள்ள மக்கள், தங்களது கண்களின் நிறத்தை நிரந்தரமாக மாற்றுவதற்கு சுமார் ரூ.10 லட்சத்திற்கு மேல் செலவு செய்து வருவதாக கூறப்படுகிறது. ‘Keratopigmentation' எனும் இந்த சிகிச்சை முறையில் கண்ணின் கார்னியாவில் (cornea) நிறமியை செலுத்தி, கண்ணின் நிறத்தை மாற்றுகின்றனர். இந்த சம்பவம் கேட்பதற்கு படுபயங்கரமாக இருப்பதாகவும், இது சட்டப்பூர்வமாக எப்படி உள்ளது? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.