ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து வெள்ளித்திருப்பூர் செல்லும் சாலையில் அந்தியூர் பெரிய ஏரி சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பாக படகு சவாரி புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இது தொடங்குவதற்கு ஏற்ப 4 படகுகள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. ஏரியின் அழகை ரசித்துக் கொண்டே இளைப்பாறும் வகையில் பூங்காவும் உள்ளது. அந்தியூர் பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு கி.மீ. தொலைவில் ஏரி உள்ளது.