"தமிழ்நாட்டுக்கு நெல்லிக்கனியாவது தந்திருக்கக் கூடாதா?” - பட்ஜெட் விமர்சனம்

68பார்த்தது
"தமிழ்நாட்டுக்கு நெல்லிக்கனியாவது தந்திருக்கக் கூடாதா?” - பட்ஜெட் விமர்சனம்
மத்திய அரசின் பட்ஜெட் குறித்து மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி விமர்சனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “பீகாருக்கு ஆப்பிளை தட்டில் வைத்து கொடுத்ததை குறை கூறவில்லை. ஆனால் தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்சம் ஒரு நெல்லிக்கனி அளவாவது திட்டங்களை தந்திருக்கலாம். அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வரும் நிலையில், பொருளாதார மந்த நிலை ஏற்பட்டு சாமானிய மக்களிடம் பணப்புழக்கமும் குறைந்து வரும் நிலையில் இந்த பட்ஜெட் ஒரு சார்பானதாகவும், திருப்தியற்ற வகையிலும் இருக்கிறது” என்றார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி