ஜூனியர் பெண்கள் 2-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மலேசியாவில் நடந்து வருகிறது. இந்தத் தொடரில் இறுதிப்போட்டி இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையே நடந்து வருகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, தென் ஆப்பிரிக்கா, 20 ஓவர்கள் முடிவில் 82 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்த நிலையில், 83 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய வீரர்கள் களமிறங்க உள்ளனர்.