திருவள்ளூர்: திருத்தணி முருகன் கோயிலில் இன்று (பிப்., 02) ஒரே நேரத்தில் 60 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. முகூர்த்த தினமான இன்று சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து திருமண விழா மற்றும் சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.