திருவண்ணாமலை: தேவிகாபுரத்தில் 500 அடி மலைக்கு மேல் அமைந்துள்ளது கனககிரீஸ்வரர் கோயில். இக்கோயில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. பின் 15ம் நூற்றாண்டில் விஜயநகர காலத்தில் விரிவுபடுத்தப்பட்டது. மற்ற கோயில்களில் செய்யப்படுவது போல இல்லாமல் இங்கே சிவனுக்கு அபிஷேகம் வெந்நீரால் செய்யப்படுகிறது. அந்த நீரை குடித்தால் பலவிதமான வியாதிகள் குணமாகும் என நம்பப்படுகிறது.