தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா கூட்டம் மாமல்லபுரத்தில் உள்ள ஹோட்டலில், வருகிற 26ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த விழாவில் பங்கேற்பவர்களுக்கான நுழைவுச் சீட்டு விநியோகிக்கும் பணி இன்று முதல் தொடங்கியுள்ளது. அழைப்பிதழ் அனுப்பப்பட்டவர்களுக்கு மட்டுமே விழா அரங்கிற்குள் அனுமதிக்கப்பட உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பலரும் போட்டிப் போட்டுக்கொண்டு இருக்கும் நிலையில் முறையான நுழைவுச் சீட்டு உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.