கோவையில் இம்மாதம் இறுதியில் தமிழக வெற்றிக் கழக பூத் கமிட்டி மாநாடு நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சரவணம்பட்டி பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. சென்னை, விழுப்புரம் தொடர்ந்து கோவையிலும் பிரமாண்ட கூட்டத்தை நடத்த தவெகவினர் திட்டமிட்டுள்ளனர். கோவையில் கடந்த சனிக்கிழமை தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.